என் மலர்tooltip icon

    இந்தியா

    டிரம்பை கண்டு பயப்படும் பிரதமர் மோடி - 5 உதாரணங்களை அடுக்கி ராகுல் விமர்சனம்
    X

    டிரம்பை கண்டு பயப்படும் பிரதமர் மோடி - 5 உதாரணங்களை அடுக்கி ராகுல் விமர்சனம்

    • பலமுறை அவமதிக்கப்பட்ட போதிலும் டிரம்ப்புக்கு தொடர்ந்து வாழ்த்துச் செய்திகளை அனுப்பிக்கொண்டே இருக்கிறார்.
    • இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெயை வாங்காது என்று டிரம்ப் முடிவு செய்து அறிவிக்க அனுமதித்தார்.

    பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை கண்டு அஞ்சுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில் இதற்கு ஆதரமாக 5 விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

    அதில், இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெயை வாங்காது என்று டிரம்ப் முடிவு செய்து அறிவிக்க அனுமதித்தது, பலமுறை அவமதிக்கப்பட்ட போதிலும் டிரம்ப்புக்கு தொடர்ந்து வாழ்த்துச் செய்திகளை அனுப்பிக்கொண்டே இருப்பது,

    நிதியமைச்சரின் அமெரிக்க பயணம் ரத்தானது, எகிப்தில் காசா அமைதி மாநாட்டுக்கு(ஷர்ம் எல்-ஷேக் மாநாடு) அழைக்கப்பட்ட போதிலும் அங்கு செல்வதை தவிர்த்தது,

    ஆபரேஷன் சிந்தூர் குறித்த டிரம்ப்பின் கருத்துக்களுக்கு முரண்படாமல் இருப்பது" ஆகியவை பிரதமர் மோடி டிரம்ப்பை கண்டு பயப்படுவதை காட்டுகிறது என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

    நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா விரைவில் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் என்று தெரிவித்தார்.

    முன்னதாக ரஷிய எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×