என் மலர்
இந்தியா

டெல்லி கார் வெடிப்பு உயிரிழப்புகள்: பிரதமர் மோடி, குடியரசு தலைவர் இரங்கல்
- உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.
- அமித் ஷா ஜி மற்றும் பிற அதிகாரிகளுடன் நிலைமை குறித்து கேட்டறித்தேன்
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.
அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் சம்பவம் குறித்து பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், இன்று மாலை டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜி மற்றும் பிற அதிகாரிகளுடன் நிலைமை குறித்து கேட்டறித்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது மனம்கனிந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.






