என் மலர்tooltip icon

    இந்தியா

    காட்டு ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயற்சி: காங்கிரஸ், ஆர்ஜேடி மீது பிரதமர் மோடி தாக்கு
    X

    காட்டு ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயற்சி: காங்கிரஸ், ஆர்ஜேடி மீது பிரதமர் மோடி தாக்கு

    • பீகார் தொழிலாளர்கள் வெளி மாநிலத்திற்கு செல்வதற்கும், மாநில வறுமைக்கும் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம்தான் பொறுப்பு.
    • பீகாரில் காட்டு ராஜ்ஜியத்தை உருவாக்கிய கட்சிகள், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயற்சி செய்கின்றனர்.

    பிரதமர் மோடி பீகாரில் உள்ள சிவான் என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * நான் வெளிநாட்டு பயணத்தின்போது பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்தேன். வளர்ச்சிக்காக ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை பாராட்டுகிறது.

    * பீகார் மக்கள் காங்கிரஸ் கட்சியால் உருவாக்கப்பட்ட காட்டு ராஜ்ஜியம் (Jungle Raj) ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

    * பீகார் தொழிலாளர்கள் வெளி மாநிலத்திற்கு செல்வதற்கும், மாநில வறுமைக்கும் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள்தான் பொறுப்பு.

    * தேசிய ஜனநாயக கூட்டணி பீகாரில் 55 ஆயிரம் கி.மீ. கிராமப்புற சாலைகளை அமைத்துள்ளது. 1.5 கோடி வீடுகள் மின்சாரம் பெற்றுள்ளன. 26 கோடி மக்கள் குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் பெற்றுள்ளனர்.

    * பீகாரில் காட்டு ராஜ்ஜியத்தை உருவாக்கிய கட்சிகள், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயற்சி செய்கின்றனர்.

    * இந்தியாவின் வறுமைக்கு காங்கிரஸின் உரிமை ராஜ்ஜியம்தான் காரணம். குடும்ப தலைவர்கள் கோடீஸ்வரர்களாகும்போது, மக்கள் இன்னும் ஏழையாகவே உள்ளனர்.

    * பீகாரின் வளர்ச்சி மற்றும் முதலீடுகளுக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உள்ளன.

    * பீகார் மேக் இன் இந்தியா முயற்சியின் மையமாகும்.

    * நாங்கள் சப்கா சாத், சப்கா விகாஸ் (Sabka saath, sabka vikas) என்கிறோம். ஆனால் ராஷ்டிரிய ஜனதா தளம் பரிவார் கா விகாஸை (parivaar ka vikas) நம்புகிறது.

    * ராஷ்டிரிய ஜனதா தளம் அம்பேத்கரை அவமதித்தது. பீகார் மக்கள் ஒருபோதும் அதன் தலைவர்களை மன்னிக்கமாட்டார்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    Next Story
    ×