search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கலாகும் மசோதாக்கள்: பட்டியல் விவரம்
    X

    சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கலாகும் மசோதாக்கள்: பட்டியல் விவரம்

    • வருடாவருடம் வழக்கமாக 3 கூட்டத்தொடர்கள் நடைபெறும்
    • சிறப்பு கூட்டத்தொடரின் மசோதாக்கள் குறித்து பல்வேறு யூகங்கள் நிலவுகிறது

    ஒவ்வொரு வருடமும் இந்திய பாராளுமன்றம், பட்ஜெட் கூட்டத்தொடர் (ஜனவரி முதல் மார்ச் வரை), மழைக்கால கூட்டத்தொடர் (ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள்) மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் (நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள்) என 3 கூட்டத்தொடருக்காக கூட்டப்படும். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11 அன்று மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது.

    இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்றுவரை பாராளுமன்றத்தின் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த அலுவல்கள் நாளை முதல் புதியதாக கட்டப்பட்டு சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற துவங்கும்.

    இதற்கிடையே, இந்த கூட்டத்தொடரில் விவாதத்திற்காக எடுத்து கொள்ளப்படவிருக்கும் மசோதாக்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் தொடர்பான 3 மசோதாக்கள், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா, வழக்கறிஞர்கள் (திருத்தம்) மசோதா 2023, பத்திரிக்கைகள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2023, அஞ்சல் அலுவலக மசோதா 2023 மற்றும் மூத்த குடிமக்கள் நல மசோதா 2023 ஆகியவை பட்டியலிடப்பட்டிருப்பதாக தெரிகிறது.

    "ஒரே நாடு, ஒரே தேர்தல்" மற்றும் "இந்தியா எனும் பெயரை பாரத் என மாற்றம் செய்வது" ஆகிய திட்டங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

    Next Story
    ×