என் மலர்
இந்தியா

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 8-ந்தேதி முதல் விவாதம் - லைவ் அப்டேட்ஸ்
- ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும்.
- 17 அமர்வுகள் இடம்பெறும் நிலையில், 32 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு.
இந்திய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் 32 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மணிப்பூர் வன்முறை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து எதிக்கட்சிகள் கேள்விகள் எழுப்பி நெருக்கடி அளித்து வருவதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Live Updates
- 21 July 2023 11:09 AM IST
சபாநாயகர் உத்தரவிட்டதும் மணிப்பூர விவகாரம் குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறோம். இதுகுறித்து அமித் ஷா சபாநாயகர் மற்றும் சேர்மேனிடம் பேசிவிட்டார். எதிர்க்கட்சிகள் புதிய கோரிக்கைகளை கொண்டு வருவது, விவாதங்களை இடைமறிப்பது தவறானது என பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி குறிப்பிட்டுள்ளார்.
- 21 July 2023 11:03 AM IST
காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற தலைவரும், மக்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி பாராளுமன்றம் வந்துள்ளார்.
- 21 July 2023 11:02 AM IST
பெண்களின் கண்ணியம், வடகிழக்கு மற்றும் எல்லை மாநிலம் தொடர்பான மிகவும் முக்கியமான உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால், எதிர்க்கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை திரும்பத் திரும்ப மாற்றிக் கொள்ள வேண்டாம் என்றும், அரசியலில் ஈடுபட வேண்டாம் என்றும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன் என பாராளுமன்ற விவகாரகள் துறை இணை மந்திரி அர்ஜூன் சிங் மெஹ்வால் தெரிவித்துள்ளார்.
- 21 July 2023 8:52 AM IST
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார். பிரதமர் மோடி மக்களவையில் பேச வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
- 20 July 2023 1:48 PM IST
வீடியோ வைரல் ஆனதால் பிரதமர் மோடி பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என ஒவைசி தெரிவித்தார்
- 20 July 2023 1:46 PM IST
துரதிருஷ்டவசமாக எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை அரசியலாக பார்க்கின்றன. நாங்கள் விவாதிக்க தயாராக இருக்கும்போது, எதிர்க்கட்சிகள் அதில் இருந்து விலகுகின்றன. ஏனென்றால், அவர்கள் ஆளும் மாவட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என மத்திய மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
- 20 July 2023 1:16 PM IST
நாங்கள் விவாதிக்க தயாராக இருக்கிறோம் என்ற பிறகும், எதிர்க்கட்சிகளின் அணுகுமுறையை பார்க்கும்போது, அவர்கள் பாராளுமன்ற கூட்டத்த நடத்த விடக்கூடாது என்பதில் என்பதில் தெளிவாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது என பியூஷ் கோயல் தெரிவித்தார்.
- 20 July 2023 1:13 PM IST
12 மணிக்குப் பிறகு ராஜ்யசபை தொடங்கியபின், மீண்டும் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தப்பட்ட நிலையில் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- 20 July 2023 11:14 AM IST
மறைந்த எம்பி ஹர்த்வார் துபே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு மாநிலங்களவை 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.






