என் மலர்
இந்தியா

காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை
- பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள் பறிமுதல்.
- அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து அந்த பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினரும், ஜம்மு-காஷ்மீர் போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதி ஒருவன் ஊடுருவ முயற்சித்துள்ளான்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். அவன் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான வெடிமருந்துகள் ஆகியவற்றை பாதுகாப்பு படையினர் மீட்டனர்.
அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
Next Story






