என் மலர்
இந்தியா

ஆபரேஷன் சிந்து: ஈரானில் இருந்து மேலும் 290 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்
- ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.
- இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி கடந்த 13-ம் தேதி ஈரான் மீது இ்ஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. ஈரானும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் இதுவரை 585 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதேபோல், இஸ்ரேலில் 24 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதனால் ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை மீட்க இந்திய தூதரகம் ஆபரேஷன் சிந்து மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக ஈரானில் இருந்து சுமார் 110 இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் வந்த விமானம் நேற்று முன்தினம் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்த பெற்றோர் அவர்களை தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், ஆபரேஷன் மூலம் ஈரானில் இருந்து மேலும் 290 இந்தியர்கள் நேற்று நள்ளிரவு பத்திரமாக தலைநகர் டெல்லி வந்தடைந்தனர்.






