search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகம்- வாலிபர் கைது
    X

    கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகம்- வாலிபர் கைது

    • சிசிடிவி காட்சியில் சைன்போர்டுகளில் இளைஞர் சுவர்களில் எழுதுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
    • புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அந்த நபர் பகிர்ந்துள்ளார்.

    டெல்லியின் ராஜிவ் சவுக் மற்றும் பட்டேல் நகர் மெட்ரோ நிலையங்களில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதற்கு பிரதமர் அலுவலகம்தான் காரணம் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டி இருந்தது.

    மேலும் சுவற்றில் வரையப்பட்ட படம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு உள்ளனர். சிசிடிவி கேமரா உள்ளது. அப்படி இருந்தும் போலீசார் இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அம்மாநில மந்திரி அதிஷி கேள்வி எழுப்பி இருந்தார்.

    மெட்ரோ ரெயில்களுக்குள்ளும், ரெயில் நிலையங்களிலும் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக ஆம் ஆத்மி புகார் அளித்து இருந்தது.

    இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி போலீசார் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    சிசிடிவி காட்சியில் சைன்போர்டுகளில் ஒரு இளைஞர் சுவர்களில் எழுதுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அந்த நபர் பகிர்ந்துள்ளார்.

    பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக அங்கித் கோயல் (33) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×