search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கட்சியில் பிளவு இல்லை...! எம்.எல்.ஏ.-க்கள் ஒட்டுமொத்த கட்சி என்று அர்த்தம் கிடையாது- சரத் பவார்
    X

    கட்சியில் பிளவு இல்லை...! எம்.எல்.ஏ.-க்கள் ஒட்டுமொத்த கட்சி என்று அர்த்தம் கிடையாது- சரத் பவார்

    • அஜித் பவார் தலைமையிலான குழு தனியாக இயங்கி வருகிறது
    • தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு இல்லை என சரத் பவார் உறுதியாக கூறுகிறார்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் உருவாக்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அவரது அண்ணன் மகன் அஜித் பவார், சில ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் உடன் தனியாக செயல்பட்டு வருகிறார். நாங்கள்தான் தேசியவாத காங்கிரஸ் என அவர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    அரசியலில் எப்படி காய் நகர்த்த வேண்டும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கும் சரத் பவாரே, தனது கட்சியை தக்கவைத்துக் கொள்வதில திண்டாடி வருகிறார். பொதுவாக ஒரு கட்சி பிளவுப்படும்போது எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் அதிகமாக யார் பக்கம் இருக்கிறார்களோ? அவர்கள் கைதான் ஓங்கியிருக்கும்.

    ஆனால், சரத் பவார் எம்.எல்.ஏ.-க்கள் ஒட்டுமொத்த கட்சிகள் என்று அர்த்தம் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறுகையில் ''தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு இல்லை. சில எம்.எல்.ஏ.-க்கள் விலகியுள்ளனர் என்பது உண்மைதான். ஆனால், எம்.எல்.ஏ.-க்கள் அரசியல் கட்சி என்று அர்த்தம் கிடையாது. அவர்களுடைய பெயர்கள் கூறி, பிரிந்து சென்றவர்களுக்கு ஏன் முக்கியத்தும் கொடுக்க வேண்டும்.

    நேற்று சரத் பவாரின் மகளும், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் செயல் தலைவருமான சுப்ரியா சுலே, ''தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு இல்லை. அஜித் பவார் அதன் தலைவராக தொடர்கிறார்'' என்றார்.

    இதற்கு முதலில் பதில் அளித்த சரத் பவார், ''இந்த விசயத்தில் எந்த சர்ச்சையும் இல்லை'' எனக் கூறியிருந்தார். பின்னர், இதுகுறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

    கடந்த ஜூலை 2-ந்தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து அஜித் பவார் உள்ளிட்ட 9 சட்டசபை உறுப்பினர்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா மந்திரிசபையில் இணைந்தனர்.

    Next Story
    ×