search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    3 மாநில முதல்வர்கள் யார்... நீடிக்கும் சஸ்பென்ஸ்
    X

    3 மாநில முதல்வர்கள் யார்... நீடிக்கும் சஸ்பென்ஸ்

    • மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

    நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது.

    பெரும்பாலும் மாநில தேர்தலின்போது பா.ஜனதா முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறிப்பிடுவதில்லை. கட்சியின் கொள்கை, பிரதமர் மோடியின் பிம்பம் ஆகிவற்றை முன்னிறுத்திதான் தேர்தலை சந்திக்கிறது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக இருக்கிறார். அவர்தான் தொடர்ந்து முதலமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படடது. சத்தீஸ்கரில் மட்டும் யாரை தேர்வு செய்வார்கள் என்பது கேள்விக்குறியாக இருந்தது.

    இதனால் 3-ந்தேதி தேர்தல் முடிவடைந்த ஒரிரு நாட்களுக்குள் முதலமைச்சர்கள் யார் என்பது தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புதுமுகம் அல்லது மாற்று நபருக்கு வாய்ப்பு கொடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால் அந்தந்த மாநில தலைவர்கள் ஒன்றிரண்டு பெயர்களை டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.

    இருந்த போதிலும் வசுந்தரா ராஜே சிந்தியா ராஜஸ்தானில் முதல் தேர்வாக இருந்து வருகிறார். மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் முதல் தேர்வாக இருந்து வருகிறார்.

    டெல்லியில் பா.ஜனதா உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்தி வந்தது. முதலமைச்சர்கள் யார் என்பதை பிரதமர் மோடி அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்று மாலை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், இதுவரை முதலமைச்சர்கள் பட்டியல் தயாராகவில்லையாம். பா.ஜனதா இன்று மூன்று மாநிலங்களுக்கும் பார்வையாளர்களை நியமிக்க இருக்கிறது. இந்த பார்வையாளர்கள் வெற்றி பெற்ற பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்களுடன் ஆலோசனை நடத்தி அதன்பின் மேலிடத்திற்கு தகவல் தெரிவிப்பார்கள். பின்னர் கட்சி மேலிடம் முதலமைச்சர்கள் பட்டியலை வெளியிடும்.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த நிலையில், நேற்ற ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    Next Story
    ×