என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
குடியரசுத் தலைவர் தேர்தல்- தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு: ஜே.பி.நட்டா அறிவிப்பு
- டெல்லியில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது.
- பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவகத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்காரி உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்முவின் பெயர் தேர்வு செய்யப்பட்டதாக ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
முதன்முறையாக பழங்குடியின பெண் வேட்பாளருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். திரௌபதி முர்மு ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.