என் மலர்tooltip icon

    இந்தியா

    ஓடும் காரின் மேல் ஏறி நடனமாடிய இளம்பெண் மீது வழக்குப்பதிவு
    X

    ஓடும் காரின் மேல் ஏறி நடனமாடிய இளம்பெண் மீது வழக்குப்பதிவு

    • இவரை யூ-டியூபில் 10 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 8.5 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர்.
    • ஏராளமான பயனர்கள், சமூக வலைதள புகழுக்காக இதுபோன்று விபரீத சாகசங்கள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பதிவிட்டனர்.

    நவி மும்பையில் ஓடும் சொகுசு காரின் பானட் மீது ஏறி இளம்பெண் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நஸ்மீன் சுல்தே என்ற அந்த பெண் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பிரபலமானவராக திகழ்கிறார். இவரை யூ-டியூபில் 10 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 8.5 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர்.

    இந்நிலையில் நஸ்மீன் சுல்தே நவி மும்பையில் காரில் சென்ற போது பானட்டில் ஏறி பிரபல இந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடி உள்ளார். காரை அவரது காதலன் ஷேக் ஓட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டனர்.

    சில பயனர்கள், இந்த வீடியோ சமீபத்தில் படகில் நடனமாடி வைரலான இந்தோனேஷியாவை சேர்ந்த 11 வயது சிறுவனின் நடனம் போல் இருப்பதாக பதிவிட்டனர். அதே நேரம் ஏராளமான பயனர்கள், சமூக வலைதள புகழுக்காக இதுபோன்று விபரீத சாகசங்கள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பதிவிட்டனர்.

    இதனைத் தொடர்ந்து நஸ்மீன் சுல்தே மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    Next Story
    ×