என் மலர்tooltip icon

    இந்தியா

    சுதந்திரதின விழாவையொட்டி டெல்லியில் பா.ஜனதாவினர் மோட்டார் சைக்கிள் பேரணி
    X

    சுதந்திரதின விழாவையொட்டி டெல்லியில் பா.ஜனதாவினர் மோட்டார் சைக்கிள் பேரணி

    • விழா வருகிற 13-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
    • பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தேசிய கொடியுடன் பங்கேற்றனர்.

    75-வது ஆண்டு சுதந்திரதின நிறைவு விழாவையொட்டி கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் வீடுகள்தோறும் அனைவரும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த விழா வருகிற 13-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

    சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று காலை டெல்லியில் பாரதீயஜனதா சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தபட்டது. இதில் பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தேசிய கொடியுடன் பங்கேற்றனர். பிரகதி மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணி இந்தியா கேட் பகுதியில் முடிவடைந்தது. இந்த பேரணியை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார்.இதில் மத்திய மந்திரிகள் , எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×