search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தாயின் கள்ளக்காதலனால் ஆற்றில் தள்ளி கொல்ல முயற்சி: ஆற்றில் தத்தளித்தபடி 100-க்கு போன் செய்து தப்பிய சிறுமி
    X

    தாயின் கள்ளக்காதலனால் ஆற்றில் தள்ளி கொல்ல முயற்சி: ஆற்றில் தத்தளித்தபடி 100-க்கு போன் செய்து தப்பிய சிறுமி

    • மற்றொரு கையில் தன்னிடம் இருந்த செல்போன் மூலம் 100 எண்ணில் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
    • 2 படகுகள் மூலம் சுகாசினி, அவரது குழந்தை ஜெர்சி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடை பள்ளியை சேர்ந்தவர் சுகாசினி (வயது 36). இவரது மகள்கள் லட்சுமி கீர்த்தனா (13), ஒரு வயது குழந்தை ஜெர்சி.

    குடிவாடாவை சேர்ந்த சுரேஷ் என்பவர் உடன் சுகாசினிக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இந்நிலையில் சுரேஷ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சுகாசினி மற்றும் அவரது மகள்களை கொல்ல சுரேஷ் முடிவு செய்தார். அவர்களை காரில் ஏற்றிக் கொண்டு கோதாவரி ஆற்று பாலத்திற்கு சென்றார். அப்போது பாலத்தில் நின்று செல்பி எடுக்கலாம் என தெரிவித்தார்.

    இதனை நம்பிய சுகாசினி தனது 2 மகள்களுடன் ஆற்று பாலத்தின் ஓரத்தில் நின்றார்.

    திடீரென சுரேஷ் சுகாசினி மற்றும் அவரது 2 மகள்களையும் ஆற்றில் தள்ளினார். மூத்த மகள் லட்சுமி கீர்த்தனா ஆற்றுப்பாலத்தில் இருந்த பிளாஸ்டிக் குழாயை பிடித்து தொங்கினார்.

    சுகாசினியும் அவரது இளைய மகள் ஜெர்சியம் ஆற்று தண்ணீரில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டனர்.

    சிறுமி லட்சுமி கீர்த்தனா ஒரு கையில் பிளாஸ்டிக் குழாயை பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் தன்னிடம் இருந்த செல்போன் மூலம் 100 எண்ணில் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    ராவுல பாலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தொங்கிக்கொண்டு இருந்த லட்சுமி கீர்த்தனாவை பத்திரமாக மீட்டனர்.

    மேலும் 2 படகுகள் மூலம் சுகாசினி, அவரது குழந்தை ஜெர்சி ஆகியோரை தேடி வருகின்றனர். அவர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை.

    ஆற்று வெள்ளத்தில் விழுந்து உயிர் தப்பிய சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    இக்கட்டான நிலையில் சிறுமி 100-க்கு போன் செய்தார்.

    எங்கள் தொலைபேசி அழைப்பிற்கு அந்த சிறுமி பதிலளித்தார், நாங்கள் அவளுக்கு தைரியத்தை ஊட்டினோம். ஒரு கையால் குழாயில் ஒட்டிக்கொண்டு, மறுபுறம் மொபைல் போனை வைத்துக்கொண்டு தொங்கினார். லட்சுமி கீர்த்தனா, டார்ச் லைட் வெளிச்சத்தை அவளைக் கண்டதும் உதவிக்காக கத்தினார்.

    "காலை 3.53 மணிக்கு, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு லட்சுமி கீர்த்தனாவிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. ரவுலபாலம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரஜினி குமார் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 15 நிமிடம் டார்ச் லைட் மூலம் சிறுமியை கண்டுபிடித்தனர்.

    லட்சுமி கீர்த்தனா இருட்டில் குழாயில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். சுமார் 36 நிமிடங்கள் வரை அவர் மன தைரியத்துடன் இருந்தார். தைரியமாக போலீசுக்கு ஒத்துழைத்தார்".

    அவர் உயிருக்கு போராடிய நேரத்திலும் 100-க்கு போன் செய்து போலீசாரை அழைத்து உயிர் தப்பியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×