என் மலர்tooltip icon

    இந்தியா

    மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் நகை பறிப்பு- குற்றவாளி கைது
    X

    மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் நகை பறிப்பு- குற்றவாளி கைது

    • தமிழ்நாடு இல்லம் அருகே எம்.பி. சுதாவின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை ஸ்கூட்டரில் வந்த நபர் பறித்துக்கொண்டு சென்றார்.
    • சக எம்.பி.க்கு தகவல் தெரிவித்ததன் பேரில் புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா டெல்லியில் தமிழக அரசின் பொதிகை இல்லத்தில் தங்கி இருந்தார். வழக்கம் போல நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் நடைபயிற்சி சென்றார். அவரோடு மாநிலங்களவை எம்.பி. கவிஞர் சல்மாவும் சென்றிருந்தார்.

    தமிழ்நாடு இல்லம் அருகே உள்ள போலந்து தூதரகம் முன் சென்றபோது எதிரே ஒரு ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு நபர், சுதாவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு சாவகாசமாக அங்கிருந்து சென்றார்.

    இந்த நேரத்தில் அந்த பகுதியில் ரோந்து வந்த போலீசாரிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர். பின்னர் சக எம்.பி.க்கு தகவல் தெரிவித்ததன் பேரில் புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் மயிலாடுதுறை எம்.பி. சுதாவிடம் நகையை பறித்துச் சென்ற குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திருடி சென்ற 4 சவரன் தங்க நகையையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    Next Story
    ×