என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானா-சத்தீஸ்கர் எல்லையில் கண்ணிவெடி குண்டுகள் பதுக்கல்- மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை கடிதம்
    X

    தெலுங்கானா-சத்தீஸ்கர் எல்லையில் கண்ணிவெடி குண்டுகள் பதுக்கல்- மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை கடிதம்

    • சத்தீஸ்கர் மாநிலத்தை விட்டு வெளியேறிய மாவோயிஸ்டு கும்பல் தெலுங்கானா மாநில எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் பதுங்கி உள்ளனர்.
    • அப்பாவி பொதுமக்கள் யாரும் இந்த பகுதிக்கு வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பதி:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் மீது அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த மாநிலத்தில் மாவோயிஸ்டு தலைவர்கள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர்.

    இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தை விட்டு வெளியேறிய மாவோயிஸ்டு கும்பல் தெலுங்கானா மாநில எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் பதுங்கி உள்ளனர்.

    பத்ராத்திரி, கொத்த குடேம் மற்றும் முலுகு மாவட்டங்களில் சத்தீஸ்கர் தெலுங்கானா எல்லையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு மாவோயிஸ்டுகள் பெயரில் பரபரப்பு கடிதம் ஒன்று வந்து வெளியாகி உள்ளது.

    அதில் ஆபரேஷன் காகர் என்ற பெயரில் நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக தற்காப்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம்.

    இதற்காக மலைப்பகுதிகளை சுற்றிலும் கண்ணி வெடிகுண்டுகள் பதுக்கி வைத்துள்ளோம். அப்பாவி பொதுமக்கள் யாரும் இந்த பகுதிக்கு வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த கடிதம் அந்த பகுதி கிராமங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

    இது குறித்து போலீசார் கூறுகையில்:-

    தெலுங்கானா சத்தீஸ்கர் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. வெடிகுண்டு செயலிழப்பு குழுக்களுடன் மலைப்பகுதிகளில் ஆய்வுகள் நடத்தப்படுகிறது. எல்லையோர கிராமங்களில் உள்ள மக்கள் கவலைப்பட வேண்டாம். வெடி குண்டுகள் இருப்பது குறித்து அறிகுறிகள் தெரிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

    Next Story
    ×