search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணிப்பூர் முதல் மும்பை வரை: மீண்டும் நடை பயணத்தை தொடங்கும் ராகுல் காந்தி
    X

    மணிப்பூர் முதல் மும்பை வரை: மீண்டும் நடை பயணத்தை தொடங்கும் ராகுல் காந்தி

    • 14 மாநிலங்கள் வழியாக ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
    • மார்ச் 20-ந்தேதி வரை 6200 கி.மீ. தூரம் இந்த நடைபயணம் அமைய இருக்கிறது.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் ஜம்மு-காஷ்மீர் வரை இந்தியாவின் தெற்கு பகுதியில் இருந்து வடக்குப் பகுதி வரை நடைபயணம் மேற்கொண்டார். இதற்கு பாரத் ஜோடோ யாத்ர எனப் பெயரிடப்பட்டிருந்து.

    தமிழ்நாடு, கேரளமா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்டு மக்களில் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் பழுது பார்த்தல், டிராக்டர் ஓட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டு மக்களோடு மக்களாக இணைந்தார். எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்த போதிலும், இவரது நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சியை அளித்தது.

    இந்த நிலையில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி "பாரத் நயா யாத்ரா" என்ற பெயரில் நடைபயணத்தை வருகிற ஜனவரி 14-ந்தேதி முதல் மேற்கொள்வார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 14 மாநிலங்கள் வழியாக ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறுகையில் "ஜனவரி மாதம் 14-ந்தேதி மணிப்பூர் தலைநகர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். நாங்கள் தெற்கு முதல் வடக்கு வரையிலான யாத்திரையை முடித்துள்ளோம்.

    இந்த யாத்திரை கிழக்கு முதல் மேற்கு வரையிலானது. மணிப்பூர் இல்லாமல் நாம் எப்படி நடை பயணம் மேற்கொள்ள முடியும்?. மணிப்பூர் மக்களின் வலியை குணப்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×