என் மலர்
இந்தியா

புதுமண தம்பதிகளான மஹுவா மொய்த்ரா - பினாகி மிஸ்ரா ஜோடி நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரல்
- 50 வயதான மஹுவா மொய்த்ரா பினாகி மிஸ்ராவை மே 3 அன்று திருமணம் செய்து கொண்டார்.
- பினாகி மிஸ்ரா புரி தொகுதியில் இருந்து நான்கு முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணா நகர் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மஹுவா மொய்த்ரா.
இவர் கடந்த 3-ந் தேதி, பிஜு ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி.யான பினாகி மிஸ்ராவை(வயது 65) ஜெர்மனியில் ரகசிய திருமணம் செய்தார். முதலில் டென்மார்க் நாட்டை சேர்ந்த பைனான்சியரான லார்ஸ் பிரார்சனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் தான் மஹுவா மொய்த்ரா ஜெர்மனியில் வைத்து ரகசியமாக 2-வது திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தில் மஹுவா மொய்த்ரா - பினாகி மிஸ்ரா ஆகியோரின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
பினாகியை கரம் பிடித்த மகுவா மொய்த்ரா இதுகுறித்து புகைப்படம் ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அதில் இருவரும் சேர்ந்து கேக் வெட்டுவது போல காட்சி இருந்தது. அதனுடன், மஹுவாவின் பதிவில், அன்பு மற்றும் நல்வாழ்த்துக்களுக்கு அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் புதுமண தம்பதிகளான மஹுவா மொய்த்ரா-பினாகி மிஸ்ரா ஆகியோர் சேர்ந்து நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 1967-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படமான ஆன் ஈவினிங் இன் பாரிஸ் படத்தில் இடம் பெற்ற காதல் பாடலான ராத் கே ஹம்சபர் பாடலுக்கு இருவரும் நடனமாடினர். வீடியோவை பார்த்த பலரும், புதுமண தம்பதியை வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.






