என் மலர்
இந்தியா
மக்களவை தேர்தல்: 102 தொகுதிகளில் 5 மணி நிலவரப்படி 59.7 சதவீத வாக்குகள் பதிவு
- வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.
- தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இன்று (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.
அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.
அதன்படி, வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், பொது மக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
Live Updates
- 19 April 2024 1:03 PM IST
சென்னை தியாகராய நகரில் உள்ள ஹிந்தி பிரச்சார சபாவில் உள்ள வாக்கு மையத்தில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் சிவக்குமார் ஆகியோர் வாக்களித்தனர்.
#WATCH | Tamil Nadu: Actor Suriya Sivakumar arrives at a polling booth in Chennai to cast his vote for the #LokSabhaElections2024 pic.twitter.com/zeVlPjbNLd
— ANI (@ANI) April 19, 2024 - 19 April 2024 12:48 PM IST
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரில் உள்ள வாக்குச்சாவடியில் சசிகலா வாக்களித்தார்.
- 19 April 2024 12:43 PM IST
சென்னை பெசன்ட் நகரில் உள்ள தி பெசன்ட் பள்ளி வாக்குச்சாவடியில் நடிகர் விக்ரம் வாக்களித்தார்.
- 19 April 2024 12:30 PM IST
சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் வாக்களித்தார். கட்சி தொடங்கிய பின் விஜய் முதல் முறையாக வாக்களித்துள்ளார்.
#WATCH | Tamil Nadu: Actor and Tamilaga Vettri Kazhagam president Vijay casts his vote at a polling booth in Neelankarai, Chennai#LokSabhaElections2024 pic.twitter.com/rTtu4tGZJy
— ANI (@ANI) April 19, 2024













