என் மலர்tooltip icon

    இந்தியா

    LIVE

    மக்களவை தேர்தல்: 102 தொகுதிகளில் 5 மணி நிலவரப்படி 59.7 சதவீத வாக்குகள் பதிவு

    • வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.
    • தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இன்று (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.

    அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.

    அதன்படி, வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், பொது மக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

    தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    Live Updates

    • 19 April 2024 2:14 PM IST

      சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள பிங்க் பூத்தில் நடிகர் அரவிந்த் சாமி வாக்களித்தார்.

    • 19 April 2024 2:05 PM IST

      சென்னையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் திரைப்பட இசையமைப்பாளர் அனிருத் வாக்களித்தார்.

    • 19 April 2024 2:00 PM IST

      தென்காசியில் உள்ள வாக்குச்சாவடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜனநாயக கடமை ஆற்றினார்.

    • 19 April 2024 1:56 PM IST

      சென்னையில் வாக்குச்சாவடியில் நடிகை ஆண்ட்ரியா வாக்களித்தார்.

    • 19 April 2024 1:46 PM IST

      சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வாக்களித்தார்.

    • 19 April 2024 1:42 PM IST

      புதுச்சேரியில் பகல் 1 மணி நிலவரப்படி 45 சதவீதம் வாக்குப்பதிவு.

    • 19 April 2024 1:41 PM IST

      பகல் 1மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 40.05 சதவீதம் வாக்குப்பதிவு.

    • 19 April 2024 1:32 PM IST

      சென்னை பெசன்ட் நகரில் உள்ள தி பெசன்ட் பள்ளி வாக்குச்சாவடியில் நடிகர் விக்ரம் வாக்களித்தார்.

    • 19 April 2024 1:30 PM IST

      தோப்புத்துறையில் உள்ள வாக்குச்சாவடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி வாக்களித்தார்.

    • 19 April 2024 1:14 PM IST

      சென்னையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகை ரம்யா பாண்டியன் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

    Next Story
    ×