என் மலர்tooltip icon

    இந்தியா

    உதட்டு சாயம் பூசும் சுட்டி குழந்தை- வீடியோ
    X

    உதட்டு சாயம் பூசும் சுட்டி குழந்தை- வீடியோ

    • சமூக வலைத்தள பிரபலமான இந்த குழந்தையை 6 லட்சம் பேர் வரை பின்தொடர்ந்து வருகிறாா்கள்.
    • கார்ட்டூன் கதாபாத்திரம் போல் ‘பாப்’ முடிதிருத்தத்துடன் நந்தூட்டி தோன்றுகிறாள்.

    கேரளா மாநிலம் புனலூரை சேர்ந்த 5 வயது பெண் குழந்தை நந்தூட்டி. முக ஒப்பனையில் ஆர்வம் கொண்ட இந்த குழந்தையின், சிகை அலங்காரம், கண்களுக்கு மை தீட்டுவது, நகப்பூச்சு அலங்காரத்தில் ஈடுபடுவது தொடர்பான வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

    சமூக வலைத்தள பிரபலமான இந்த குழந்தையை 6 லட்சம் பேர் வரை பின்தொடர்ந்து வருகிறாா்கள். இந்தநிலையில் நந்தூட்டி, முக ஒப்பனையில் ஈடுபடுவது தொடர்பான புதிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் கார்ட்டூன் கதாபாத்திரம் போல் 'பாப்' முடிதிருத்தத்துடன் நந்தூட்டி தோன்றுகிறாள்.

    பின்னர் தனது உதட்டுக்கு சாயம் பூசி அந்த சுட்டி பெண் மகிழ்கிறாள். இடைஇடையே தன் தலையை ஆட்டியும், மழலை மொழியில் தன்னை தானே பாராட்டியும் கொள்கிறார். ஒருசில வினாடிகள் கொண்ட இந்த வீடியோ 4 நாட்களில் 95 லட்சம் பார்வைகளையும் 5 லட்சம் 'லைக்'குகளை அள்ளி வைரலாகி வருகிறது.



    Next Story
    ×