என் மலர்tooltip icon

    இந்தியா

    கடந்த 11 ஆண்டில் நாட்டின் ஜனநாயகம், பொருளாதாரம், சமூக கட்டமைப்பு சீரழிந்துள்ளது: கார்கே
    X

    கடந்த 11 ஆண்டில் நாட்டின் ஜனநாயகம், பொருளாதாரம், சமூக கட்டமைப்பு சீரழிந்துள்ளது: கார்கே

    • தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் நலிந்த பிரிவினர் மீதான சுரண்டல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • மணிப்பூரில் நடைபெறும் முடிவில்லா வன்முறை பாஜக-வின் நிர்வாகத் தோல்விக்கு மிகப்பெரிய சான்றாகும்.

    நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவி ஏற்று 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார்.

    2019 தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றது. 2024 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பிரதமர் மோடி, அனைத்து துறைகளிலும் விரைவான மாற்றம் எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே, நாட்டின் ஜனநாயகம், பொருளாதாரம், சமூக கட்டமைப்பு சீரழிந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    11 ஆண்டுகளில் மத்திய அரசு அரசியலமைப்பின் ஒவ்வொரு பக்கத்திலும் சர்வாதிகாரத்தின் மையை மட்டுமே பூசியுள்ளது. பாஜக-ஆர்எஸ்எஸ் அனைத்து அரசியலமைப்பு அமைப்புகளையும பலவீனப்படுத்தியுள்ளது. அவற்றின் சுயாட்சியை தாக்கியுள்ளன.

    தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் நலிந்த பிரிவினர் மீதான சுரண்டல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் சம உரிமைகளைப் பறிக்கும் சதி தொடர்கிறது. மணிப்பூரில் நடைபெறும் முடிவில்லா வன்முறை பாஜக-வின் நிர்வாகத் தோல்விக்கு மிகப்பெரிய சான்றாகும்.

    இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×