என் மலர்
இந்தியா

VIDEO: இணையவாசிகளை கதிகலங்க வைத்த 'கிரீம் பிஸ்கெட்' ஆம்லெட்
- முட்டை கலவையுடன் பிஸ்கெட்டும் வெந்து அடர் பழுப்பு நிறத்தில் மாறுகிறது.
- ஆம்லெட் பதிவு வலைத்தளத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
சமூக வலைத்தளத்தில் வித்தியாசமான உணவு வகைகளின் செய்முறை குறிப்புகள் பகிரப்பட்டு அதிக பார்வைகளை ஈர்ப்பது வாடிக்கையாக உள்ளது. தற்போது இணையத்தில் புதிதாக வெளியாகி உள்ள ஒரு உணவு தயாரிப்பு வீடியோ சமூக வலைத்தளவாசிகளை கதிகலங்க வைத்துள்ளது.
கொல்கத்தாவில் சாலையோர உணவகத்தில் தயாரிக்கப்பட்ட புதுவித ஆம்லெட் தொடர்பான வீடியோவே அதற்கு காரணம். அந்த வீடியோவில் சமையல் கலைஞர் சூடான தோசைக்கல்லில் முட்டைகள் உடைத்து ஊற்றுகிறார்.
பார்வையாளர்கள் ஏதோ சாதாரண ஆம்லெட் தயாரிப்பு வீடியோதான் என நினைப்பதற்குள் தனது பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்துகிறார். அதாவது முட்டை கலவை வெந்து வரும் நேரத்தில் ஒரு பாக்கெட் முழுவதும் உள்ள கிரீம் பிஸ்கெட்டுகளை அதிலே கொட்டுகிறார். முட்டை கலவையுடன் பிஸ்கெட்டும் வெந்து அடர் பழுப்பு நிறத்தில் மாறுகிறது.
பின்னர் வெந்த அந்த 'கிரீம் பிஸ்கெட்' ஆம்லெட்டை தனது ரசனைக்கேற்ப அலங்கரித்து வாடிக்கையாளர்களிடம் வழங்குகிறார். இந்த ஆம்லெட் பதிவு வலைத்தளத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.






