என் மலர்
இந்தியா

தொகுதி மாற்றமா?: விளக்கம் அளித்த கெஜ்ரிவால்
- புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடப் போவதாக கெஜ்ரிவால் கூறினார்.
- முன்னாள் முதல் மந்திரி மகன்களை எதிர்த்து போட்டியிட உள்ளேன் என்றார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜ.க ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றன. இதற்காக அக்கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
அதன்படி, புதுடெல்லி தொகுதியில் டெல்லியில் 3 முறை காங்கிரஸ் சார்பில் முதல் மந்திரி பதவி வகித்த ஷீலா தீட்ஷித் மகன் சந்தீப் தீட்ஷித்தை அக்கட்சி களமிறக்கியது.
அதேபோல், முன்னாள் முதல் மந்திரி ஷாகிப் சிங் வர்மா மகன் பர்வேஷ் வர்மாவை இத்தொகுதியில் பா.ஜ.க. களமிறக்கியது.
இதற்கிடையே, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் தொகுதி மாறுவார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தனியார் செய்தி நிறுவன நிகழ்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட உள்ளேன். இத்தொகுதியில் முதல் மந்திரி மகன்களுக்கும், சாமானிய மனிதருக்கும் இடையில் போட்டியிருக்கும். முதல் மந்திரி அதிஷி கல்காஜ் தொகுதியில் போட்டியிடுவார் என தெரிவித்தார்.






