search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    என்னுடைய மிகப்பெரிய சொத்து நேர்மை: அதை பா.ஜனதா சிதைக்க விரும்புகிறது- அரவிந்த் கெஜ்ரிவால்
    X

    என்னுடைய மிகப்பெரிய சொத்து நேர்மை: அதை பா.ஜனதா சிதைக்க விரும்புகிறது- அரவிந்த் கெஜ்ரிவால்

    • விசாரணைக்கு அழைப்பது போன்று அழைத்து அதன்பின் கைது செய்ய அவர்கள் விரும்புகிறார்கள்.
    • நான் எந்தவித ஊழலும் செய்யவில்லை. பா.ஜனதாவில் சேராதவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனையில் ஈடுபட்டு, அதன்பின் கைது செய்ய இருக்கிறார்கள் என்ற செய்தி டெல்லியில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதனையொட்டி அவரது வீட்டு முன் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எந்தவிதமான ஊழலும் நடக்கவில்லை என்பதுதான் உண்மை. பா.ஜனதா என்னை கைது செய்ய விரும்புகிறது. என்னுடைய மிப்பெரிய சொத்து என்னுடைய நேர்மை. அவர்கள் அதை சிதைக்க பார்க்கிறார்கள்.

    அவர்கள் எனக்கு அனுப்பிய சம்மன் சட்ட விரோதமானது என்று என்னுடைய வழக்கறிஞர் என்னிடம் தெரிவித்தார். பா.ஜனதாவின் எண்ணம் என்னிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதல்ல. மக்களவை தேர்தலுக்கு என்னை பிரசாரம் செய்ய விட்டுவிடக் கூடாது என்பதுதான்.

    விசாரணைக்கு அழைப்பது போன்று அழைத்து அதன்பின் கைது செய்ய அவர்கள் விரும்புகிறார்கள். நான் எந்தவித ஊழலும் செய்யவில்லை. பா.ஜனதாவை எதிர்த்ததனால் எங்கள் தலைவர்கள் சிறையில் உள்ளனர். மத்திய அமைப்புகள் மூலம் மிரட்டி கைது செய்ய பா.ஜனதா முயற்சிக்கிறது.

    நாங்கள் எந்த தவறும் செய்யவில்ல. இதனால் பா.ஜனதாவை கண்டு பயமில்லை. பா.ஜனதாவில் சேராதவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் எனக்கு எதிராக அமலாக்கத்துறை எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை.

    இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

    Next Story
    ×