என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜனதா பொதுச்செயலாளர்களுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை
    X

    பா.ஜனதா பொதுச்செயலாளர்களுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை

    • பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன.
    • பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது கவுரவ பிரச்சினையாக கருதப்படுகிறது.

    புதுடெல்லி :

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3-வது தடவையாக மத்தியில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

    அதே சமயத்தில், பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணி நடந்து வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த ஆண்டு 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்கின்றன. காஷ்மீரிலும் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டால், 10 மாநிலங்கள் ஆகிவிடும்.

    இந்த சட்டசபை தேர்தல்கள், பாராளுமன்ற தேர்தலுக்கு அரை இறுதி பந்தயமாக பார்க்கப்படுகின்றன. இவற்றில் வெற்றி பெறுவது கவுரவ பிரச்சினையாக கருதப்படுகிறது.

    இந்த தேர்தல்களுக்கான வியூகம் வகுப்பது குறித்து விவாதிப்பதற்காக பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம், இம்மாதம் 16 மற்றும் 17-ந் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. அதில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா மூத்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    தேர்தல்கள் மட்டுமின்றி, ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகிப்பது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

    இந்தநிலையில், பா.ஜனதா தேசிய செயற்குழுவின் செயல்திட்டம் குறித்து விவாதிப்பதற்காக அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. கட்சி தலைவர் ஜே.பி.நட்டா தலைமை தாங்கினார்.

    உட்கட்சி விவகாரங்கள் மற்றும் சட்டசபை தேர்தல் நடக்கும் மாநிலங்களில் தேர்தல் தொடர்பான பணிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    தேசிய செயற்குழுவில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்கள் பற்றியும் பேசப்பட்டது.

    Next Story
    ×