என் மலர்tooltip icon

    இந்தியா

    சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து நீடிக்கிறது- இந்தியா அறிவிப்பு
    X

    சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து நீடிக்கிறது- இந்தியா அறிவிப்பு

    • பாகிஸ்தான், தனது வான் பரப்பை திறந்துவிட்டு வெள்ளைக்கொடி காட்டியது.
    • பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டுவதில் இந்தியா உறுதியாக இருக்கிறது.

    புதுடெல்லி:

    ஆபரேஷன் சிந்தூர் பதிலடி தாக்குதலுக்கு பின்னர், 4 நாட்களாக நீடித்து வந்த இந்தியா-பாகிஸ்தான் மோதல், நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து பாகிஸ்தான், தனது வான் பரப்பை திறந்துவிட்டு வெள்ளைக்கொடி காட்டியது. ஆனால் தாக்குதலை நிறுத்திய இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமானதான சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து என்ற முடிவை திரும்பப்பெறவில்லை.

    இதுகுறித்து இந்தியா தரப்பில், "பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டுவதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. ஏப்ரல் 23 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அறிவித்த நடவடிக்கைகள் அமலில் இருக்கும்" என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம், அட்டாரி-வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் மாற்றம் இல்லை என்று தெரியவந்துள்ளது.

    Next Story
    ×