என் மலர்
இந்தியா

இந்திய பெண் விமானி சிறைபிடிக்கப்படவில்லை - மத்திய அரசு மறுப்பு
- பாகிஸ்தான் ராணுவம் கடந்த 3 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது.
- பாகிஸ்தானின் தாக்குதல்கள் அனைத்தையும் இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 3 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது. இந்திய ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
எல்லையில் நேற்றிரவு முதல் பாகிஸ்தான் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதல்களில் அரசு அதிகாரி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் தாக்குதல்கள் அனைத்தையும் இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இந்தநிலையில் இந்திய பெண் விமானி பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
விமானப்படை விமானி ஷிவானி சிங் சிறைபிடிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
Next Story






