என் மலர்tooltip icon

    இந்தியா

    பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்து ஐ.நா-வில் முறையிட இந்தியா முடிவு
    X

    பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்து ஐ.நா-வில் முறையிட இந்தியா முடிவு

    • பயங்கரவாத அமைப்புகள் மீது தடைகளை விதிக்கும் UNSCR 1267 என்ற குழுவிடம் முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • UNSCR 1267 என்ற குழு அடுத்த வாரம் கூட உள்ளதால், இந்தியா தனது குழுவை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவிடம் பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்து இந்தியா முறையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, பாகிஸ்தானின் பயங்கரவாதத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆதாரத்தை அளித்து முறையிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பயங்கரவாத அமைப்புகள் மீது தடைகளை விதிக்கும் UNSCR 1267 என்ற குழுவிடம் முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    UNSCR 1267 என்ற குழு அடுத்த வாரம் கூட உள்ளதால், இந்தியா தனது குழுவை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கும் UNSCR 1267 குழு தீர்மானம், 1999ல் ஏற்கப்பட்டது.

    Next Story
    ×