என் மலர்
இந்தியா

போர் பதற்றம் எதிரொலி- CA தேர்வுகள் ஒத்திவைப்பு
- ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளும் எல்லை பகுதிகளில் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இருநாடுகளும் முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், பட்டய கணக்காளருக்கான சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டயக் கணக்காளர் கழகம் அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்வுகளுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Next Story






