என் மலர்
இந்தியா

சாலை விபத்து - உதவி கோரிய மனிதன்! மரித்துப் போன மனிதநேயம்! - அதிர்ச்சி வீடியோ
- 31 வினாடிகளே ஓடும் வீடியோவில், லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.
- கடைசியில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இன்றைய நவ நாகரீகம் எவ்வளவு தான் வளர்ந்தாலும் மனிதர்களிடையே முந்தைய காலக்கட்டத்தில் காணப்பட்ட பாசம், பண்பு, சகிப்புத்தன்மை, மனிதநேயம் என்பது இக்கால மக்களிடையே குறைவாகவே உள்ளது. பணத்திற்கான ஓட்டம் தான் மக்களிடையே அதிகம் காணப்படுகிறது. மேலும் பணத்திற்காக கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற சம்பவங்களும் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.
இதனிடையே, இணையத்தின் தாக்கம் காரணமாக உலகின் எந்த மூலையிலும் சம்பவங்கள் எது நடந்தாலும் உடனடியாக சமூக வலைதளங்களில் பரவி விடுகிறது. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவை பார்க்கும் ச்சே.. என்ன மனிதர்களோ... என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
31 வினாடிகளே ஓடும் வீடியோவில், லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது. லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்து டிரைவர் முகத்தில் ரத்தத்தோடு காணப்படுகிறார். அப்போது அவர் உதவிக் கேட்பது போல் தெரிகிறது. ஆனால் அங்கு இருப்பவர்களோ அவர் சொல்வதை கேட்காமல், அவரின் பர்ஸ் மற்றும் செல்போனை கொள்ளையடிக்கிறார்கள். கடைசியில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் கர்நாடகாவில் நடந்ததாக கூறப்படுகிறது.
சாலையில் மனித நேயம் இறந்து விட்டது... என்ற தலைப்பில் சினேகா மொர்தானி என்பவர் வெளியிட்ட வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும், மிகவும் வருத்தமாகவும், அருவருப்பாகவும் உள்ளது என்று தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.






