என் மலர்
இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் சுகாதாரத்துறை கட்டமைப்புகள் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளன: அமித் ஷா
- பிரதமர் மோடி அரசின் கீழ் 60 கோடி ஏழை மக்கள் 5 லட்சம் வரையில் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர்.
- மோடி தலைமையிலான அரசு 1.35 லட்சம் கோடி ரூபாய் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தேசிய புற்றுநோய் இன்ஸ்டிடியூட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் தங்குவதற்காக வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கான ஸ்வாஸ்தி நிவாஸ் (Swasti Niwas) திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
இந்த அடிக்கல் விழாவில் அமித் ஷா பேசியதாவது:-
பிரதமர் மோடி அரசின் கீழ் 60 கோடி ஏழை மக்கள் 5 லட்சம் வரையில் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர். மோடி தலைமையிலான அரசு 1.35 லட்சம் கோடி ரூபாய் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கியுள்ளது. இது மன்மோகன் அரசில் 37 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. பிரதமர் மோடி தலைமையின் கீழ் சுகாதாரத்துறை கட்டமைப்புகள் மிகப்பெரிய வளர்சியை பெற்றுள்ளன.
வரும் காலங்களில் இந்த இன்ஸ்டிடியூட் கேன்சருக்கு சிகிச்சை அளிக்கும் நாட்டின் சிறந்ததாக வளர்ச்சிப் பெற இருக்கிறது. கேன்சருக்கான சிகிச்சை நீண்ட காலமானது. நோயாளிகள், அவர்களுடைய குடும்பங்களின் வலி அதிகமானது. வலியை தனிப்பட்ட முறையில் அனுபவிப்பவர்கள் மட்டுமே சமூகத்திற்கு சேவை செய்யும் மனப்பான்மையைக் கொண்டுள்ளனர் மற்றும் மக்களின் துன்பத்தை துடைக்கிறார்கள்.






