என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறுவன் ஓட்டி வந்த கார் மோதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுமி- வீடியோ வைரல்
    X

    சிறுவன் ஓட்டி வந்த கார் மோதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுமி- வீடியோ வைரல்

    • காரில் நம்பர் பிளேட் இல்லை.
    • இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 55 வினாடிகளே ஓடும் அந்த வீடியோவில், குடியிருப்புகள் நிறைந்த தெருவில் 3 வயது சிறுமி தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தெருவுக்குள் கார் ஒன்று நுழைகிறது. அந்த காரை சிறுவன் ஓட்டி வருகிறான். அச்சிறுவன் சிறுமி விளையாடிக் கொண்டிருப்பதை கவனிக்காமல் சிறுமி மீது மோதி காரை ஓட்டிச் செல்கிறான்.

    அந்த கார் சிறிது தூரம் சென்றவுடன் நிற்கிறது. அப்போது காருக்கு அடியில் சிக்கிய சிறுமி காயமின்றி உயிர் தப்பிக்கிறார். சத்தமிட்டபடியே காரின் அடியில் இருந்து ஊர்ந்து சிறுமி வெளியே வருகிறாள். அச்சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம், பக்கத்தினர் ஓடி வருகின்றனர்.

    இதனிடையே, காரில் இருந்து இறங்கிய சிறுவனை, சிறுமியின் தாயார் கடுமையாக தாக்குகிறார். விபத்தை ஏற்படுத்திய காரில் நம்பர் பிளேட் இல்லை. இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் சிறுமி மற்றும் சிறுவனின் பெற்றோரின் கவனக்குறைவாலேயே இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வாதாக சமூக வலைத்தள பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



    Next Story
    ×