என் மலர்tooltip icon

    இந்தியா

    நாய் பிரியர்களுக்கு நற்செய்தி.. தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவுக்கு தடை விதித்த  உச்சநீதிமன்றம்
    X

    நாய் பிரியர்களுக்கு நற்செய்தி.. தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம்

    • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
    • தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியுள்ளது.

    டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும்.

    இதை மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.

    இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட பெஞ்ச் கவனித்தும் எடுத்துக் கொள்ளும் எனத் தெரிவித்தது. ஆகஸ்டு 14ஆம் தேதி இது தொடர்பாக மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணை நடத்தி, உத்தரவு பிறப்பிக்காமல் ஒத்திவைத்தது.

    இந்த நிலையில் இன்று மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து புதிய உத்தரவை 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ளது.

    பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த உத்தரவுக்கு நாய் பிரியர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×