என் மலர்
இந்தியா

கடற்கரையில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 4 சிறுவர்கள் உட்பட 10 பேர் கைது
- பத்துக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் அவர்களை நெருங்கியது.
- அவர்களை வயது வந்தவர்களாகக் கருதி வழக்கை விசாரிக்க நீதிமன்றத்திடம் கோரப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோபால்பூர் கடற்கரையில் 20 வயது இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நான்கு சிறுவர்கள் உட்பட பத்து பேர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனது ஆண் நண்பருடன் அப்பெண் கடற்கரைக்குச் சென்றிருந்தபோது, ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பத்துக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் அவர்களை நெருங்கி, நண்பரை கட்டிப்போட்டுவிட்டு, பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் தெரிவித்தார்.
காவல்துறையினர் முதலில் ஏழு பேரையும், பின்னர் மற்ற மூன்று பேரையும் கைது செய்தனர். குற்றவாளிகள் வேறு மாநிலத்திற்கு தப்பிச் செல்ல முயன்றபோது பிடிபட்டனர். மூவர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும், மற்ற ஏழு பேர் அதற்கு துணை நின்றனர் என்றும் எஸ்பி சரவண விவேக் எம் தெரிவித்துள்ளார்.
சிறார்கள் இத்தகைய கொடூர குற்றத்தில் ஈடுபட்டதால், அவர்களை வயது வந்தவர்களாகக் கருதி வழக்கை விசாரிக்க நீதிமன்றத்திடம் கோரப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.






