என் மலர்
இந்தியா

மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை: கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு பாஜக கண்டனம்
- கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணியை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
- 3 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், பாஜக தலைவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவியை, சக மாணவர்கள் இருவர் மற்றும் முன்னாள் மாணவர் ஒருவர் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கல்லூரிக்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரியில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதி கேட்டு நாழு தழுவிய போராட்டம் நடைபெற்றது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த சம்பவம், மேற்கு வங்களத்தில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது காட்டுகிறது என அம்மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தான் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சுகந்தா மஜும்தார் கூறியதாவது:-
ஆர்.ஜி. கெர் மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்ற ஒரு வருடம் ஆகியது. அதற்குள் தற்போது சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இது மேற்கு வங்கத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது.
போலீஸ் துறை முதலமைச்சர் கைவசம் இருந்தும் கூட, மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவை சந்தித்துள்ளது. மம்தா பானர்ஜி முதல்வர் நாற்காலியில் அமர உரிமை இல்லை. அவர் தனது முதல் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு சுகந்தா மஜும்தார் தெரிவித்துள்ளார்.
மேலும், இடைத்தேர்தலில் பெற்ற மம்தா கட்சியினர் கொண்டாடியபோது வெடிவிபத்து ஏற்பட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.






