என் மலர்tooltip icon

    இந்தியா

    மாதம் வெறும் ரூ.4,200 சம்பளத்தில் தொடங்கி ரூ.1 கோடி சொத்து சேர்த்த நபர்!
    X

    மாதம் வெறும் ரூ.4,200 சம்பளத்தில் தொடங்கி ரூ.1 கோடி சொத்து சேர்த்த நபர்!

    • மாதம் ரூ.4,200 சம்பளத்தில் Proofreader வேலையை தொடங்கினேன்.
    • வங்கியில் இருந்து FD மூலம் மாதம் 60,000 வட்டி கிடைக்கிறது.

    பெங்களூருவை சேர்ந்த ஒரு நபர் 10ம் வகுப்பு வரை தான் படித்திருந்தாலும், தனக்கு கிடைத்த குறைந்த வருமானத்தில் சிறுக சிறுக சேமித்து 1 கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டி இருக்கிறார்.

    ரூ.1 கோடி சேர்த்ததாக ரெட்டிட் தளத்தில் நபர் ஒருவர் பகிர்ந்த பதிவு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    அந்த பதிவில், "2000களில் மாதம் ரூ.4,200 சம்பளத்தில் Proofreader வேலையை தொடங்கினேன். 20 வருடங்களுக்கு பிறகு ஓய்வு பெறும் போது ரூ.63,000 சம்பளம் வாங்கினேன். இப்போது வங்கியில் ரூ.1.01 கோடி சேர்த்துள்ளேன். அதில் இருந்து எனக்கு வங்கியில் இருந்து FD மூலம் மாதம் 60,000 வட்டி கிடைக்கிறது. சரியான நிதி திட்டமிடலே இதற்கு காரணம்" என்று தெரிவித்துள்ளார்.

    கடன் எதுவும் இல்லாமல் ரூ.1 கோடி சேர்த்த நபரின் பதிவு இணையத்தில் பலருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது.

    Next Story
    ×