என் மலர்tooltip icon

    இந்தியா

    பாகிஸ்தானில் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. தவறிவிட்டது - மத்திய வெளியுறவுத்துறை செயலாளர்
    X

    பாகிஸ்தானில் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. தவறிவிட்டது - மத்திய வெளியுறவுத்துறை செயலாளர்

    • பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதல் அப்பாவி மக்களுக்கு எதிரான தீவிரமான கொடூரமான தாக்குதல்.
    • குடும்பத்தினர் முன்னர் அப்பாவி மக்கள் நெற்றி பொட்டில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக 3 தீவிரவாத அமைப்புகளை குறிவைத்து 9 இடங்களில் 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்தப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரோஷி, விக் கமாண்டர் வியோம்கா சிங் ஆகியோர் விளக்கம் அளிக்கின்றனர்.


    மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேசுகையில், பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதல் அப்பாவி மக்களுக்கு எதிரான தீவிரமான கொடூரமான தாக்குதல். குடும்பத்தினர் முன்னர் அப்பாவி மக்கள் நெற்றி பொட்டில் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீரில் சுற்றுலாவை முடிவுக்கு கொண்டுவர நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல். பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக ஆதாரம் கிடைத்துள்ளது. காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்க பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தான் மூலம் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. தவறிவிட்டது என்று குற்றம்சாட்டினார்.

    செய்தியாளர்கள் சந்திப்புக்கு முன்பு, 2001-ம் ஆண்டு பாராளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், மும்பை தாக்குதல், புல்வாமா தாக்குதல் குறித்த வீடியோக்களை இந்திய ராணுவம் ஒளிபரப்பியது.



    Next Story
    ×