இந்தூரில் பரபரப்பு: விமான நிலைய வளாகத்தில் திடீர் தீ #Fire

தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தூரில் பரபரப்பு: விமான நிலைய வளாகத்தில் திடீர் தீ #Fire
Published on

போபால்:

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் தேவி அகல்யாபாய் ஹோல்கர் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த விமான நிலைய வளாகத்தில் உள்ள பயன்படுத்தப்படாத பகுதியில் காய்ந்த புற்களில் திடீரென தீ பற்றியது.

தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தினர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. விமான சேவைகளும் பாதிக்கப்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com