என் மலர்
இந்தியா

பிளக்ஸ் கார்டால் வைரலான டோனி ரசிகை
- பூமிகா என்ற ரசிகை டோனியின் பேட்டிங்கை பார்த்த பிறகு அவருக்கு சிறப்பு செய்தியுடன் கூடிய பிளக்ஸ் கார்டை காட்டிய புகைப்படம் எக்ஸ் தளத்தில் வைரலானது.
- புகைப்படம் இணையத்தில் வைரலாகி ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ்- லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது டோனியின் ரசிகையான பூமிகா என்ற ரசிகை டோனியின் பேட்டிங்கை பார்த்த பிறகு அவருக்கு சிறப்பு செய்தியுடன் கூடிய பிளக்ஸ் கார்டை காட்டிய புகைப்படம் எக்ஸ் தளத்தில் வைரலானது.
மேலும் பூமிகா தனது வலைதள பக்கத்தில் அந்த படத்தை பகிர்ந்து, மஹேந்திர சிங் டோனியின் பேட்டிங்கை நான் கண்டேன் என எழுதி இருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்றது.
Mahi ki vintage batting dekh li?? pic.twitter.com/v6fZdlXVSa
— Bhumika (@thisisbhumika) April 19, 2024
Next Story






