என் மலர்
இந்தியா

மொத்த பாகிஸ்தானும் அழிக்கப்பட வேண்டும் - பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவரின் மனைவி ஆவேசம்
- தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த சமீர் குஹாவும் ஒருவர்.
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் உள்ள பைசரனில் கடந்த மாதம் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். மிருகத்தனமான இந்த தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து, பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 'நீதி வென்றது' என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
மேலும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த சமீர் குஹாவும் ஒருவர்.
இந்நிலையில் அவரது மனைவி சார்போரி குஹா இந்திய ராணுவத்தின் பதில் தாக்குதல் குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இது நடக்க வேண்டிய ஒன்றுதான். மொத்த பாகிஸ்தானுமே அழித்தொழிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற (பஹல்காம் தாக்குதல் போன்ற) சம்பவங்கள் மீண்டும் நடக்கத்தான் செய்யும் என்று தெரிவித்தார்.






