search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தவ் தாக்கரேவுக்கு தீப்பந்தம் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
    X

    உத்தவ் தாக்கரே

    உத்தவ் தாக்கரேவுக்கு தீப்பந்தம் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

    • அடுத்த மாதம் 3-ம் தேதி அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
    • உத்தவ் தாக்கரே அணியினருக்கு தீப்பந்தம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிர மாநிலத்தில் பலமான கட்சிகளில் ஒன்றான சிவசேனா கடந்த ஜூன் மாதம் 2 ஆக உடைந்தது. தற்போது அந்தக் கட்சி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2 பிரிவாக செயல்பட்டு வருகிறது. ஏக்நாத் ஷிண்டே வசம் பெரும்பாலான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். உத்தவ் தாக்கரேவிடம் கட்சி நிர்வாகிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

    இதற்கிடையே அடுத்த மாதம் 3-ம் தேதி அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் மனைவி போட்டியிடுகிறார்.

    இந்த இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரேவுக்கு வில்,அம்பு சின்னத்தை ஒதுக்கக் கூடாது என ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. இதனால் தேர்தல் ஆணையம் சிவசேனாவின் பெயர், வில், அம்பு சின்னத்தை முடக்கியது. மேலும் 2 தரப்பினரும் வேறு பெயர், சின்னத்துடன் செயல்பட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    இதையடுத்து, உத்தவ் தாக்கரே அணியினர் தீப்பந்தம், திரிசூலம், உதயசூரியன் ஆகிய 3-ல் ஒரு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டு இருந்தனர். இதேபோல சிவசேனா பாலாசாகேப் பிரபோந்த்கர் தாக்கரே, சிவசேனா பாலாசாகேப் தாக்கரே, சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே ஆகிய பெயர்களில் ஒன்றை தங்கள் அணிக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்து இருந்தனர்.

    இந்நிலையில், உத்தவ் தாக்கரே அணியினருக்கு தீப்பந்தம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மேலும், சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே என்ற பெயரையும் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×