என் மலர்
இந்தியா

பிரதமர் மோடிக்கு போன் செய்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன டொனால்டு டிரம்ப்!
- புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதில் நானும் முழுமையாக உறுதிபூண்டுள்ளேன்.
- உக்ரைன் போருக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான உங்கள் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்
பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 17) தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில் அவருக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசி மூலம் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,"எனது நண்பர் அதிபர் டிரம்ப், எனது 75வது பிறந்தநாளில் உங்கள் தொலைபேசி அழைப்புக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி.
உங்களைப் போலவே, இந்தியா-அமெரிக்க விரிவான மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதில் நானும் முழுமையாக உறுதிபூண்டுள்ளேன்.
உக்ரைன் போருக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான உங்கள் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்." என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய பொருட்கள் மீது டிரம்ப் கடந்த மாதம் 50 சதவீதம் வரிவிதித்த பின் இரு நாட்டு உறவுகளிலும் விரிசல் நிலவி வந்த நிலையில் இதன்பின் முதல் முறையாக பிரதமர் மோடி - டிரம்ப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.






