search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    நர்ஸை நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம் செய்ய வந்த டாக்டர்.. பிறப்பு உறுப்பு பிளேடால் துண்டிப்பு
    X

    நர்ஸை நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம் செய்ய வந்த டாக்டர்.. பிறப்பு உறுப்பு பிளேடால் துண்டிப்பு

    • ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனராக இருக்கும் மருத்துவர் சஞ்சய் குமார் என்பவரும் அவரது சகாக்கள் இருவரும் நர்ஸை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.
    • நர்ஸ் உபயோகித்த பிளேடு, ரத்தம் தோய்ந்த துணிகள், மூன்று கைபேசிகள், அரை பாட்டில் சாராயம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

    கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு பலர் போராடி வரும் அதே வேளையில் பீகாரில் உள்ள மருவத்துவமனையில் நர்ஸை டாக்டர் உட்பட மூவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

    பீகாரின் கங்காபூரில் உலா RBS ஹெல்த் கேர் என்ற தனியார் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை இரவு, ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனராக இருக்கும் மருத்துவர் சஞ்சய் குமார் என்பவரும் அவரது சகாக்கள் இருவரும் சேர்ந்து குடிபோதையில் அங்கு பணியாற்றி வந்த நர்ஸ் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடிய நர்ஸ், டாக்டர் சஞ்சய் குமாரின் பிறப்பு உறுப்பை கையில் கிடைத்த பிளேடால் அறுத்துவிட்டுள்ளார்.

    அதன்பின் மருத்துவமனையில் இருந்து தப்பித்த நர்ஸ், அருகில் இருந்த இடத்தில் மறைந்துகொண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்துக்கு விரைத்த போலீஸ் நர்ஸை மீட்டு டாக்டர் சஞ்சய் குமார் உட்பட அந்த மூவரையும் கைது செய்துள்ளனர். நர்ஸை பலாத்காரம் செய்ய முடுவெடுத்ததும் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களை டாகடர் அணைத்துள்ளார் என்றும் சம்பவ இடத்தில் இருந்து நர்ஸ் உபயோகித்த பிளேடு, ரத்தம் தோய்ந்த துணிகள், மூன்று கைபேசிகள், அரை பாட்டில் சாராயம் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×