என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
தமிழக ஆளுநரை திரும்ப பெறுவது குறித்து விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளோம் - தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு
- அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
- இதில் தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு பங்கேற்றார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. மழைக்கால கூட்டத்தொடர் 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக மணிப்பூர் கலவர விவகாரம் பாராளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
விலைவாசி உயர்வை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுவது குறித்து விவாதிக்க தி.மு.க. சார்பில் நோட்டீஸ் கொடுத்துள்ளோம்.
மணிப்பூர், விவகாரம், பொது சிவில் சட்டம், ஒடிசா ரெயில் விபத்து ஆகியவை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்தார்.