search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் காங்கிரஸ்: விஜயேந்திரா கிண்டல்
    X

    வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் காங்கிரஸ்: விஜயேந்திரா கிண்டல்

    • ஏழை மக்களுக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளின்படி 10 கிலோ அரிசியை கொடுக்க வேண்டும்.
    • மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறுவது சரி இல்லை.

    பெங்களூரு :

    பெங்களூருவில் பா.ஜனதா துணை தலைவரான விஜயேந்திரா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி பி.பி.எல்.(வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்) குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, ஏழை மக்களுக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளின்படி 10 கிலோ அரிசியை கொடுக்க வேண்டும்.

    இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறுவது சரி இல்லை. வெளிமாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்வதன் மூலமாக கமிஷன் பெறுவதற்கு முயற்சிகள் நடக்கிறது. நமது மாநிலத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் அரிசி ஆலைகளில் இருந்தே அரிசியை வாங்கி மக்களுக்கு கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்தால் கமிஷன் பெற முடியாது.

    இதன் காரணமாக தான் மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறி வெளிமாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்து கமிஷன் பெறும் முயற்சிகள் நடக்கிறது. காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகிறது. இதில் இருந்து மக்களை திசை திருப்பும் நோக்கத்தில் மதமாற்றம் தடை சட்டம், ஏ.பி.எம்.சி. திருத்த சட்டத்தை காங்கிரஸ் ரத்து செய்திருக்கிறது. இலவச திட்டங்களை நிறைவேற்றுவதில் இருந்து தப்பிக்க மக்களை திசை திருப்புவதுடன், மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×