என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் எப்போதும் கூட்டாளிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது: ஆம் ஆத்மி
    X

    காங்கிரஸ் எப்போதும் கூட்டாளிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது: ஆம் ஆத்மி

    • பாராளுமன்றத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்தோம்.
    • அரியானா சட்டசபை மற்றும் குஜராத் இடைத்தேர்தலில் காங்கிரஸ் தனியாக சென்றுவிட்டது.

    காங்கிரஸ் எப்போதும் அதன் கூட்டாளிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது. கோவாவில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கிடையாது என கோவா மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் அமித் பலேகர் தெரிவித்துள்ளார்.

    கோவாவில் 2027ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அமித் பலேகர் கூறியதாவது:-

    கோவாவில் பொதுவாக சொல்லப்படும் விசயம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு வாக்களிப்பது மாதிரி. ஏனென்றால் இங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் அங்கு மாறிவிடுவார்கள். இது கடந்த காலங்களில் நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் எம்.எல்.ஏ.க்களை பெறும்போது, அவர்கள் பாஜக-வில் இணைந்து விடுவார்கள். கோவாவில் இப்படி நடந்ததை இரண்டு முறை பார்த்திருக்கிறோம். இதனால் மக்கள் அவ்வாறு உணர்கிறார்கள்.

    கடந்த மக்களை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்தது. ஆனால், குஜராத் (இடைத்தேர்தல்) மற்றும் அரியானா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் அதன் கூட்டாளியை (ஆம் ஆத்மி) விட்டு விலகி துரோகம் இழைத்தது. காங்கிரஸ் உடன் கூட்டணி உருவாக்குவதற்கான கேள்விக்கே இடமில்லை.

    இவ்வாறு தெரிவித்தார்.

    40 தொகுதிகளை கொண்ட கோவாவில் ஆம் ஆத்மிக்கு 2 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர்.

    Next Story
    ×