என் மலர்tooltip icon

    இந்தியா

    மகாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதிக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெற மத்திய அரசு அனுமதி..
    X

    மகாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதிக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெற மத்திய அரசு அனுமதி..

    • 2018ல் கேரள பெருவெள்ளத்தின் போது, பல நாடுகளில் இருந்து அம்மாநில அரசுக்கு நிதியுதவி வழங்க முன்வந்தபோது ஒன்றிய அரசு அனுமதி மறுத்தது.
    • FCRA இன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.

    மகாராஷ்டிரா முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக் கணக்கிற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010 இன் கீழ் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

    சட்டத்தின்படி, வெளிநாட்டு பங்களிப்புகளைப் பெறும் அனைத்து சங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் FCRA இன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.

    மகாராஷ்டிரா முதலமைச்சரின் நிவாரண நிதி தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்ததால் FCRA இல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு மாநிலம் இந்த அனுமதியை பெறுவது இதுவே முதல் முறை.

    முன்னதாக கடந்த 2018ல் கேரள பெருவெள்ளத்தின் போது, பல நாடுகளில் இருந்து அம்மாநில அரசுக்கு நிதியுதவி வழங்க முன்வந்தபோது ஒன்றிய அரசு அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெள்ளத்தில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து நிர்கதியாக்கப்பட்டனர்.

    Next Story
    ×