என் மலர்

  இந்தியா

  காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 3வது முறையாக ஒத்தி வைப்பு
  X

  (கோப்பு படம்)

  காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 3வது முறையாக ஒத்தி வைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தமிழகம் எதிர்ப்பு
  • முன்னதாக ஜூன் 17, 23 தேதிகளில் நடைபெற இருந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

  டெல்லியில் நாளை நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவது குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

  மேலும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி, மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். தமிழக அரசின் எதிர்ப்பு நிலை காரணமாக ஏற்கனவே ஜூன் 17, 23 தேதிகளில் நடைபெறவிருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

  இந்நிலையில் நாளை நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஒத்தி வைக்கப் படுவதாக காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

  Next Story
  ×