என் மலர்tooltip icon

    இந்தியா

    பயணிகள் விமானம் மீது மோதிய சரக்கு லாரி.. மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு சம்பவம்
    X

    பயணிகள் விமானம் மீது மோதிய சரக்கு லாரி.. மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு சம்பவம்

    • விமானத்தின் வலது இறக்கையின் நுனிப் பகுதி சேதமடைந்தது.
    • மாற்று விமானத்தை ஏற்பாடு செய்து பயணிகளை டெல்லிக்கு அனுப்பியது.

    மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில், அகாசா ஏர் விமானம் மீது சரக்கு லாரி மோதியதில், விமானத்தின் வலது இறக்கையின் நுனிப் பகுதி சேதமடைந்தது.

    திங்கள்கிழமை அதிகாலை 7:05 மணிக்கு மும்பையில் இருந்து டெல்லி செல்லவிருந்த QP1410 என்ற விமானம் ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, சரக்கு கன்டெய்னர் லாரி மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    விபத்துக்குள்ளான விமானம் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அகாசா ஏர், மாற்று விமானத்தை ஏற்பாடு செய்து பயணிகளை டெல்லிக்கு அனுப்பியது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×